தங்கப் பதக்கம் வென்றார் ருமேஷ் தரங்க!

இந்தியாவின் ராஞ்சியில் இன்று (26) நடைபெற்ற தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றார். 

அவர் இந்த போட்டியில் 84.29 மீட்டர் எறிந்து வெற்றி பெற்றார். 

இந்த போட்டியில் 81.62 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சுமேத ரணசிங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

Exit mobile version