ஹீட்டரிலிருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

பொக்காவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்புகேவெல பிரதேசத்தில் நேற்று (30) இரவு மின்சாரம் தாக்கி ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மின்சார ஹீட்டர் (Electric Heater) ஒன்றைத் தொட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி, ரம்புகேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பொக்காவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version