‘முழு நாடுமே ஒன்றாக’ தென் மாகாண வேலைத்திட்டம் ஆரம்பம்

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய திட்டத்தின் தென் மாகாண வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் இணைந்துகொண்டார். 

இந்த வேலைத்திட்டம் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் தங்காலை பொது மைதானத்தில் ஆரம்பமானது. 

போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கான தற்போதைய அரசாங்கத்தின் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக இந்த வேலைத்திட்டம் நடத்தப்படுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Exit mobile version