யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்த தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டார். 

யாழ் நகர் பகுதியில் போதை மாத்திரைகளின் பரவல் அதிகரித்திருப்பதாகவும், விற்பனை செய்யப்படுவதாகவும் கிடைத்த தகவலுக்கு அமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

ஐந்து சந்திப் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் 10 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார். 

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது 75 போதை மாத்திரைகள் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. 

சந்தேக நபரை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Exit mobile version