கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச் சூடு!

கட்டுநாயக்காவின் 18வது போஸ்ட் பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version