அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 500 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவிக்கையில்,

அரிசி, டின் மீன், சிவப்பு சீனி, பெரிய வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன

குறித்த பொருட்களை சந்தை விலையை விடவும் மிகக்குறைந்த விலையில் சதொச ஊடாக இம்மாதம் முழுவதும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version