அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து ; 06 பேர் பலி

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க நேரப்படி நேற்று 10 ஆம்திகதி பிற்பகல் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விமானியைத் தவிர இறந்த ஐந்து பேரும் ஸ்பெயினிலிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவர்.

விபத்து தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்படும் வரை பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.  

Exit mobile version