இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையிலும் ஒரு பவுன் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. 

இதன்படி, 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 12,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதன் அடிப்படையில், இன்று (02) 24 கரட் ஒரு பவுன் தங்கம் 368,000 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கம் 338,600 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

உலக சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,687 அமெரிக்க டொலர்களாக உள்ளது. 

இது கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 200 அமெரிக்க டொலர் வீழ்ச்சியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version