இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, வேகப்பந்து வீச்சாளர் இஷான் மாலிங்க உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பது தற்போது சந்தேகமாகியுள்ளது.
இந்தக் காயம் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகும் அபாயம் உள்ளதாக அணித்தலைவர் தசுன் சானக தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண அணித்தலைவர்களின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தசுன் சானக இதனை உறுதிப்படுத்தினார்.
