தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர் (Sergio Gor) உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (19) இலங்கையை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இன்று முதல் மார்ச் 24 ஆம் திகதி வரை அவர் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது, இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல உயர்மட்டக் கலந்துரையாடல்களில் அவர் பங்கேற்கவுள்ளார்.
இலங்கைக்கான இந்த விஜயத்தின் போது, விசேட பிரதிநிதி நாட்டின் சிரேஷ்ட தலைவர்களைச் சந்தித்து அமெரிக்க-இலங்கை உறவின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தவுள்ளதுடன், பல முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
