கண்டியில் களைகட்டிய மகளிர் தின விழா: சாதனைப் பெண்களுக்குச் சிறப்பு கௌரவம்!

கண்டி இந்து மகளிர் சங்கத்தின் ஏற்பாட்டில், சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் கண்டி டெவோன் மண்டபத்தில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றன.


கண்டி இந்து மகளிர் சங்கத்தின் தலைவி செல்வி. கலையரசி, உப தலைவி திருமதி. பிரியதர்ஷினி, செயலாளர் திருமதி. ஷர்மிளா பரமேஸ்வரன் மற்றும் பொருளாளர் திருமதி. எஸ். சுமதி ஆகியோரின் தலைமையில் இந்த விழா இடம்பெற்றது. இதன்போது, சமூகத்தில் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்த மகளிரை கௌரவிக்கும் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.


குறிப்பாக, சமூக சேவை, ஆன்மீகம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அளப்பரிய சேவையாற்றிய மாத்தளை சாம ஸ்ரீ யோகராணி பாலசுப்பிரமணிய சர்மா அம்மையார் அவர்களுக்கு, கண்டி இந்து மகளிர் சங்கத்தினால் ஞாபகச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, சங்கத்தின் தலைவி, உப தலைவி மற்றும் பொருளாளர் ஆகியோரை ஏனைய உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.


மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் இசை நிகழ்ச்சிகள், நடனங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் எனப் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் இவ்விழாவில் அரங்கேறின.

Exit mobile version