உலகில் ஐந்து பேர் மாத்திரமே பார்த்துள்ள புதிய நிறமான ‘ஓலோ’ என்ற நிறத்தை கண்டுபிடித்துள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆய்வில் ஈடுபட்டுள்ள ஐந்து பேரே தற்போதைக்கு இந்த நிறத்தை பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீல – பச்சை நிறத்தின் நிறைவுற்ற நிழல் என்று கூறப்படும் இந்த நிறத்தை, லேசர் தூண்டுதலின் உதவியின்றி வெற்று கண்ணால் பார்க்க முடியாது என கூறப்படுகிறது.
இது சாதாரண வண்ண உணர்வின் வரம்பைத் தாண்டிய நிறம் இதனை மொபைல் டிஸ்பிளேவில், கம்ப்யூட்டர் மானிட்டரில் பார்க்க முடியாது. லேசர் மூலம் மட்முமே உணர முடியும். என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது குறித்த தகவல், சயின்ஸ் எட்வான்சஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.