மரம் முறிந்து விழுந்து பாடசாலை மாணவன் உட்பட மூவர் பலி


நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மூன்று சக்கர வண்டி மீது பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (04) காலை இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், விபத்தில் ஒரு பாடசாலை மாணவனும் இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விபத்திலிருந்து முச்சக்கரவண்டியின் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்

Exit mobile version