உள்ளூராட்சி மன்றங்களின் பிரநிதிதிகளின் ஊழல் பட்டியலை வெளியிட அரசாங்கம் தீர்மானம்

முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளாக இருந்தவர்களின் ஊழல் பட்டியலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முன்பு அதிகாரத்தில் இருந்த கட்சிகளின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள், பல்வேறு ஊழல்களை மேற்கொண்டுள்ளனர்.

ஒருசிலர் கடந்த அரகலய காலத்தில் இடம்பெற்ற வன்செயல்கள் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு பெறுமதி கூடிய இழப்பீடுகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அவ்வாறானவர்களின் பட்டியலை எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பெரும்பாலும் மேதினக் கொண்டாட்டங்களை அடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அல்லது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மூலமாக குறித்த பட்டியல்கள் பகிரங்கப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  

Exit mobile version