பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட நால்வர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு இன்று (30) நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதற்கமைய, பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் சந்தேக நபருக்கு உதவி புரிந்த இருவர் உள்ளிட்ட நால்வரும் எதிர்வரும் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாரம்மல பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர், சந்தேக நபரின் மனைவி, கொலைக்கு உதவி வழங்கிய குண்டசாலை பிரதேச சபையின் சாரதி மற்றும் குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் கல்லூரியின் பொலிஸ் பரிசோதகர் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
