ஆப்பிள் கையடக்க தொலைபேசி மாடல்களுக்கு வாட்ஸ்அப் நீக்கம்

எதிர்வரும் மே மாதம் முதல் ஆப்பிள் கையடக்க தொலைபேசியின் சில மாடல்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக இணைப்புகள் இனி செயற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஐபோன் மாடல்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக இணைப்புகள் இனி செயற்படாது, இதில் பழைய ஆப்பிள் மொபைல் போன்களான ஐபோன் 5s, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் ஆகியவை அடங்கும்.

அதன்படி iOS 15.1க்கு முந்தைய மொபைல் போன் மாடல்களை புதிய இயங்குதளத்திற்கு புதுப்பிக்க முடியாவிட்டால், வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version