இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெற்றோல் 92 Unl, விமான வகை டீசல் எண்ணெய் மற்றும் டீசல் (0.05% M.S) ஆகியவற்றை நீண்டகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் கொள்முதல் செய்வதற்காக, பதிவுசெய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட சர்வதேச விலைமனுக்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, உயர்மட்ட பிராந்திய கொள்முதல் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், கணிசமான குறைந்தபட்ச விலைமனுதாரர்களுக்கு இந்த கொள்முதல் ஒப்பந்தங்களை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஒப்பந்த விவரங்கள் வருமாறு:
- பெற்றோல் 92 Unl (1.2 மில்லியன் பீப்பாய்கள் ± 5%):
- பரிந்துரைக்கப்பட்ட நிறுவனம்: Aditya Birla Global Trading (Singapore) Pte. Ltd., Singapore
- ஒப்பந்தக் காலம்: 2026.09.01 முதல் 2027.02.28 வரை
- விமான வகை டீசல் எண்ணெய் (2.8 மில்லியன் பீப்பாய்கள் ± 5%):
- பரிந்துரைக்கப்பட்ட நிறுவனம்: Aditya Birla Global Trading (Singapore) Pte. Ltd., Singapore
- ஒப்பந்தக் காலம்: 2026.11.01 முதல் 2027.02.28 வரை
- டீசல் – 0.05% M.S (1.12 மில்லியன் பீப்பாய்கள் ± 5%):
- பரிந்துரைக்கப்பட்ட நிறுவனம்: M/s Vitol Asia Pte. Ltd, Singapore
- ஒப்பந்தக் காலம்: 2026.09.01 முதல் 2027.02.28 வரை
