பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

இதற்கமைய, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவித்தல் செல்லுபடியாகும். 

குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படக்கூடும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version