கனடாவின் ஒன்டாரியோவில் எல்மர் பகுதிக்குத் தெற்கே வெள்ளிக்கிழமை காலை எஸ்.யு.வீ வாகனம் மோதியதில் எலக்ட்ரிக் பைக் ஓட்டிச் சென்றவர் உயிரிழந்தார்.
மலாஹைட் பகுதியில் உள்ள ஜான் வைஸ் லைன் மற்றும் இம்பீரியல் ரோடு சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 6:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பைக் ஓட்டுநர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
