கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதியில், நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த 37 வயதுடைய பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த எஸ்.யு.வி கார் ஒன்று மோதியதில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து டொராண்டோ காவல்துறை சனிக்கிழமை பிற்பகல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விவரங்களைத் தெரிவித்துள்ளது.
பாத்தர்ஸ்ட் தெருவில் வடக்கே நோக்கி வெள்ளை நிற நிசான் பாத்ஃபைண்டர் காரை 18 வயது இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
