மனித கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது

மஹியங்கனை, அலுக்கட்டியாவ பகுதியில் நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் நேற்று (11) இரவுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற இக்குற்றச்செயல் தொடர்பாக மஹியங்கனை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அவ்விசாரணைகளின் பிரதிபலனாக, குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரைக் கைது செய்ய முடிந்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாபாகடவெவ பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞராவார். சம்பவம் தொடர்பாக மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version