கனடாவில் படகு கவிழ்ந்து விபத்து: கலிபோர்னியாவைச் சேர்ந்த முதியவர் பலி!

கனடாவின் ஜார்ஜியன் பே பகுதியில் படகு ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து மாகாணக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சனிக்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில், பிராங்க்ளின் தீவுக்கு வடக்கே உள்ள ஜார்ஜியன் பே நீர்நிலைப் பகுதியில் படகு கவிழ்ந்துள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version