சீதுவை நகர் பகுதியில் உள்ள விடுதியொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு நபர் ஒரு கொலை செய்யப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர் போயகனே பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவராவார்.
உயிரிழந்த நபர் குறித்த விடுதியின் மேல் மாடியில் தங்கியிருந்த அவ்விடுதியின் ஊழியர் என தெரியவந்துள்ளது.
இவர் மற்றொரு ஊழியருடன் இணைந்து மதுஅருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறு முற்றியதில், மேல் மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
