அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் ஆசனப்பட்டி கட்டாயம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இன்று (19) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட விதிகளின்படியாகும். அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டும் என்ற விதிகள் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட போதிலும், சில வாகனங்களில் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களுக்கான ஆசனப்பட்டிகள் இல்லாத காரணத்தினால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

Exit mobile version