அவிசாவளை – புலத்கோஹுபிட்டிய வீதியின் பொல்கட்டுவங்குவ பகுதிக்கு அருகில் பாயும் ரிட்டிகஹ ஓயாவில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழந்தார். இன்று (20) காலை பெய்த பலத்த மழை காரணமாக ரிட்டிகஹ ஓயாவின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்த நிலையில், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பிரதேச மக்களும், ருவன்வெல்ல பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, அவர் விழுந்த இடத்திற்குச் சற்றுக் கீழேயுள்ள நீர்நிலையொன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்தவர் அம்பாகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பிரேதப் பரிசோதனை கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
- Home
- ரிட்டிகஹ ஓயாவில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு
ரிட்டிகஹ ஓயாவில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு
-
By me24tamil - 0
- 0

Related Content
-
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம்
By me24tamil 2 weeks ago -
தங்கொட்டுவ பகுதியில் பெண் கொலை!
By me24tamil 2 weeks ago -
டெல் அவிவிலிருந்து புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
By me24tamil 2 weeks ago -
விஹாரமஹாதேவி பூங்காவில் 4 ஆவது நாளாகவும் பிக்குமாரின் சத்தியாகிரகம் தொடர்கிறது
By me24tamil 2 weeks ago -
நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்
By me24tamil 2 weeks ago -
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன!
By me24tamil 3 weeks ago