சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 13 தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா வலயத்தின் 156 பாடசாலைகளில் 4 பாடசாலைகளுக்கும், ஹட்டன் வலயத்தின் 150 பாடசாலைகளில் 9 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளர்களினால் அதிபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதற்கமையவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களின் ஏனைய பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறும் என்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
- Home
- நுவரெலியா மற்றும் ஹட்டனில் 13 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
நுவரெலியா மற்றும் ஹட்டனில் 13 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
-
By me24tamil - 0
- 0

Related Content
-
மனச்சோர்வை குறைக்க புதிய ‘Brain Stimulation Headset’ ; அமெரிக்காவில் புதிய சாதனம் அறிமுகம்
By me24tamil 41 minutes ago -
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு பிடியாணை
By me24tamil 42 minutes ago -
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!
By me24tamil 42 minutes ago -
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு
By me24tamil 42 minutes ago -
அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிதாரி உட்பட நால்வர் கைது!
By me24tamil 43 minutes ago -
ரிட்டிகஹ ஓயாவில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு
By me24tamil 1 day ago