முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் செயித் அல்-ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில், கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் சந்தேநபராக பெயரிடப்பட்டுள்ள விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- Home
- முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு பிடியாணை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு பிடியாணை
-
By me24tamil - 0
- 0

Related Content
-
நுவரெலியா மற்றும் ஹட்டனில் 13 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
By me24tamil 40 minutes ago -
மனச்சோர்வை குறைக்க புதிய ‘Brain Stimulation Headset’ ; அமெரிக்காவில் புதிய சாதனம் அறிமுகம்
By me24tamil 41 minutes ago -
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!
By me24tamil 42 minutes ago -
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு
By me24tamil 42 minutes ago -
அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிதாரி உட்பட நால்வர் கைது!
By me24tamil 43 minutes ago -
ரிட்டிகஹ ஓயாவில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு
By me24tamil 1 day ago