வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலையொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடற்பரப்புகளில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம், மேற்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது இன்றைய தினம் குறைந்த அழுத்தப் பிரதேசமாகவும், (Depression), நாளைய தினம் தீவிர குறைந்த அழுத்தப் பிரதேசமாகவும், (Deep Depression) வலுவடைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version