பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியை (நீக்குவதற்கான) சட்டமூலத்திற்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது சான்றொப்பத்தை இட்டுள்ளார். இதன்படி, குறித்த சட்டமூலம் நேற்று (22) முதல் சட்டமாக அமுலுக்கு வந்துள்ளது. இந்த சட்டமூலம் முதன்முறையாக வாசிப்பதற்காக 2026 ஓகஸ்ட் 04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் இரண்டாம் வராக வாசிப்பு மீதான விவாதம் கடந்த செப்டம்பர் 09 ஆம் திகதி நடைபெற்றதுடன், அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பின்றி அது நிறைவேற்றப்பட்டது. பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி பதவியை நிறுவி அறிமுகப்படுத்தப்பட்ட 2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாதுகாப்புத் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்காகவே இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
- Home
- பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது
-
By me24tamil - 0
- 0

Related Content
-
22ஆவது திருத்தத்திற்கு எதிராக மனசாட்சிக்கு அமைய வாக்களியுங்கள்
By me24tamil 7 hours ago -
நீர் வெறுப்பு நோய் ஒழிப்பு, நாய்கள் பதிவிற்கான புதிய சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
By me24tamil 7 hours ago -
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு
By me24tamil 7 hours ago -
இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - அறுவர் வைத்தியசாலையில்
By me24tamil 7 hours ago -
நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி பலி - மற்றையவர் மாயம்
By me24tamil 7 hours ago -
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை!
By me24tamil 7 hours ago