அஹுங்கல்ல, வெலிகந்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று (01) இரவு 8.10 மணியளவில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் 9 மி.மீ ரகப் பிஸ்டல் துப்பாக்கியால் சுட்டு இக்கொலையைச் செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் லந்துவாஹந்தி சுகத் நுவன் குமார டி சில்வா என்பவரே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகக் கருதப்படும் “லொகு பெட்டி” என்பவரின் சகோதரர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். துப்பாக்கிச் சூடு தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Home
- லொகு பெட்டியின் சகோதரர் சுட்டுக் கொலை
லொகு பெட்டியின் சகோதரர் சுட்டுக் கொலை
-
By me24tamil - 1
- 0

Related Content
-
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம்
By me24tamil 1 week ago -
தங்கொட்டுவ பகுதியில் பெண் கொலை!
By me24tamil 1 week ago -
டெல் அவிவிலிருந்து புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
By me24tamil 1 week ago -
விஹாரமஹாதேவி பூங்காவில் 4 ஆவது நாளாகவும் பிக்குமாரின் சத்தியாகிரகம் தொடர்கிறது
By me24tamil 1 week ago -
நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்
By me24tamil 1 week ago -
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன!
By me24tamil 2 weeks ago