இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயணிகள் கார்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான டயர்களுக்கு புதிய இலங்கை தரநிலைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளின் கீழ் குறித்த புதிய ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2024 மே 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2384/35 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த தர நிர்ணயம் மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் மேலும் திருத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, அந்த ஒழுங்குவிதிகளின் ‘B’ உபஅட்டவணையில் பயணிகள் கார் டயர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான நியூமடிக் (pneumatic) டயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பயணிகள் கார் டயர்களுக்கு SLS 1212 தரநிலையும், முச்சக்கர வண்டிகளுக்கான நியூமடிக் டயர்களுக்கு SLS 1347 தரநிலையும் பொருந்தும். பயணிகள் கார் டயர்களுக்கான H.S. குறியீடு 4011.10.90 என்பதோடு, முச்சக்கர வண்டி டயர்களுக்கான H.S. குறியீடு 4011.90.10 ஆகும். இந்த புதிய ஒழுங்குவிதிகள் 2027 ஜனவரி 1 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் இலங்கையின் ஏதேனும் ஒரு துறைமுகத்திற்கோ அல்லது விமானநிலையத்திற்கோ கொண்டுவரப்படும் குறித்த டயர்களுக்குச் செல்லுபடியாகும்.
- Home
- கார் மற்றும் முச்சக்கர வண்டி டயர்களுக்கு புதிய தரநிலைகள்
கார் மற்றும் முச்சக்கர வண்டி டயர்களுக்கு புதிய தரநிலைகள்
-
By me24tamil - 1
- 0

Related Content
-
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம்
By me24tamil 1 week ago -
தங்கொட்டுவ பகுதியில் பெண் கொலை!
By me24tamil 1 week ago -
டெல் அவிவிலிருந்து புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
By me24tamil 1 week ago -
விஹாரமஹாதேவி பூங்காவில் 4 ஆவது நாளாகவும் பிக்குமாரின் சத்தியாகிரகம் தொடர்கிறது
By me24tamil 1 week ago -
நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்
By me24tamil 1 week ago -
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன!
By me24tamil 2 weeks ago