உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம் 2 ட்ரில்லியனை கடந்த

2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதியளவில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனது வருமானச் சேகரிப்பில் 2 ட்ரில்லியன் ரூபா எல்லையைக் கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இவ்வருட ஜனவரி 1 ஆம் திகதி முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட மொத்த வருமானம் 2,040 பில்லியன் ரூபாவாகும். 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் சேகரிக்கப்பட்டிருந்த 1,642 பில்லியன் ரூபா வருமானத்துடன் ஒப்பிடுகையில், இது 398 பில்லியன் ரூபா அதிகரிப்பாகும்.

Exit mobile version