தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீதம் அதிகரிப்பாகும் என்பதுடன், இவ்வருடத்தின் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 0.3 சதவீதம் அதிகரிப்பாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலைவாய்ப்பின்றி உள்ள நபர்களின் எண்ணிக்கை 340,240 என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 6.1 சதவீதம் பேர் பெண்கள் என்றும் 2.8 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவினரிலேயே அதிக வேலைவாய்ப்பின்மை விகிதம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் தொழிலாளர் படையும் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 49.3 சதவீதமாகப் பதிவாகியிருந்ததுடன், இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் 49.2 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.
- Home
- நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மீண்டும் உயர்வு
நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மீண்டும் உயர்வு
-
By me24tamil - 1
- 0

Related Content
-
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம்
By me24tamil 1 week ago -
தங்கொட்டுவ பகுதியில் பெண் கொலை!
By me24tamil 1 week ago -
டெல் அவிவிலிருந்து புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
By me24tamil 1 week ago -
விஹாரமஹாதேவி பூங்காவில் 4 ஆவது நாளாகவும் பிக்குமாரின் சத்தியாகிரகம் தொடர்கிறது
By me24tamil 1 week ago -
நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்
By me24tamil 1 week ago -
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன!
By me24tamil 2 weeks ago