கருணாவின் முதல் மனைவியின் பெயரில் பல ஏக்கர் காணி அபகரிப்பு!

மட்டக்களப்பு கிரான் தடாணை பெருளாவெளி பகுதியிலுள்ள மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் 09 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ஜீவனோபாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராயும் போது கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்த பகுதியில் சுமார் 100 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த நிலையில் கருணாவின் முதல் மனைவியின் பெயரின் பல ஏக்கர காணிகள் இருப்பதாக பாதிக்கப்பட்ட மூதாட்டியொருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
மண்ணை மீட்க போராடியவர்கள் மக்களின் காணிகளை அபகரிக்கப்பது நியாயமா என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Exit mobile version