2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியிலும், நடப்பு (2026) ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியிலும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஊடாக 167,569 வாகனங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமம் (HIPG) தெரிவித்துள்ளது.இதற்கமைய, 2025 ஆம் ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் 30,809 புதிய வாகனங்கள் மற்றும் 55,580 பயன்படுத்தப்பட்ட (Used) வாகனங்கள் அடங்கலாக மொத்தம் 86,389 வாகனங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.அத்துடன், 2026ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் மேலும் 81,180 வாகனங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 25,018 புதிய வாகனங்களும் 56,162 பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் அடங்குகின்றன.வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருந்த போதிலும், போக்குவரத்து மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இறக்குமதியாளர்களுக்குத் தேவையான முழுமையான ஆதரவை வழங்க நடவடிக்கை எடுத்ததாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமம் சுட்டிக்காட்டியுள்ளது.இதேவேளை, ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமத்தின் உடனடிச் செயற்பாடுகள், செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மை மற்றும் நடைமுறைச் சாதகமான ஆதரவு ஆகியவற்றை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) பாராட்டியுள்ளது.
- Home
- ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக 1.67 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் விநியோகம்!
ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக 1.67 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் விநியோகம்!
-
By me24tamil - 1
- 0

Related Content
-
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம்
By me24tamil 1 week ago -
தங்கொட்டுவ பகுதியில் பெண் கொலை!
By me24tamil 1 week ago -
டெல் அவிவிலிருந்து புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
By me24tamil 1 week ago -
விஹாரமஹாதேவி பூங்காவில் 4 ஆவது நாளாகவும் பிக்குமாரின் சத்தியாகிரகம் தொடர்கிறது
By me24tamil 1 week ago -
நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்
By me24tamil 1 week ago -
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன!
By me24tamil 2 weeks ago