கட்டுநாயக்க விமான நிலையத்தில் 600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் கைப்பற்றப்பட்ட அதிகளவான சிகரெட் தொகை இதுவாகும் என சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். எமிரெட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாயிலிருந்து சந்தேகநபர்கள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். கொழும்பு வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, பம்பலப்பிட்டிய மற்றும் கொஸ்வத்த பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நால்வரும் விமான நிலையத்தை விட்டு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வெளியேற முயன்றதைத் தொடர்ந்து அவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களின் 20 பைகளில் இருந்த சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- Home
- பல இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் நால்வர் கைது
பல இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் நால்வர் கைது
-
By me24tamil - 1
- 0

Related Content
-
கஜ்ஜாவின் கொலை பின்னணியை வௌியிட்ட பெக்கோ சமன்
By me24tamil 1 hour ago -
பஞ்சிகாவத்தை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது
By me24tamil 1 hour ago -
எல்பிட்டியவில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு
By me24tamil 1 hour ago -
செப்டம்பர் மாதத்திலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
By me24tamil 1 hour ago -
நாட்டில் பிற்பகல் வேளையில் கடும் மழைக்கு வாய்ப்பு
By me24tamil 1 hour ago -
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து மாற்றுத்திறனாளி சிறுவன் சாதனை
By me24tamil 1 hour ago