வெசாக் போயா தின அலங்காரங்களை பார்வையிடுவதற்காக சிறைக்கைதிகள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்.
அறிவிப்பை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மே 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் இந்த சிறப்பு அனுமதி நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விடுமுறையை முன்னிட்டு கைதிகளின் உறவினர்கள் அவர்களை பார்ப்பதற்கும் அனுமதிக்கப்படுவர்.
மேலும், கைதிகளை பார்வையிட வரும் உறவினர்கள், உணவுப் பொதிகள், இனிப்புகள் மற்றும் தனிப்பட்ட சுகாதாரப் பொருட்களைக் கொண்டு வரவும் முடியும்.