அமெரிக்காவிடம் 160 விமானங்களை கொள்வனவு செய்யவுள்ள கத்தார்

அமெரிக்காவின் Boeing நிறுவனத்திடம் இருந்து கத்தார் ஏர்வேஸ் 160 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.இந்த வர்த்தக ஒப்பந்தம், ட்ரம்பின் கத்தார் பயணத்தில் முக்கியத்துவமான நிகழ்வாக அமைந்தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது மத்திய கிழக்கு பயணத்தின் போது, விமான உற்பத்தியில் உலகின் மிகப்பாரிய வர்த்தக ஒப்பந்தமாக கருதப்படும் 200 பில்லியன் டொலர் மதிப்புள்ள Boeing ஒப்பந்தத்திற்கு சாட்சியமாக இருந்தார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், கத்தார் அரசின் கீழ் இயங்கும் Qatar Airways, அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான Boeing-இனிடமிருந்து 160 புதிய விமானங்களை வாங்க உள்ளது.இந்நிலையில் இது 200 பில்லியன் டொலரை தாண்டும், ஆனால் 160 விமானங்கள் என்பதே முக்கியம். இது ஒரு சாதனை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Exit mobile version