சீதா நதிக்கு மேலே புதிய நடைபாலம் திறப்பு

இரத்தினபுரியில் உள்ள குருவிட்ட – எரன்ன ஸ்ரீ பாத சாலையில் சீதா நதியின் ஊடாக கட்டப்பட்ட புதிய பாலம் அண்மையில் பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

இதற்காக, சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு முப்பது (30) மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.இந்தப் பாலம் 60 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சஞ்சீவ கொடெல்லவத்த, திட்டமிடல் பணிப்பாளர் ருவன் பிரேமரத்ன, நிர்வாக பொறியியலாளர் சமன் வேரஹெர மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version