மே மாதத்தில் 90 ஆயிரத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

இந்த வருடத்தின் மே மாதத்தின் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 91,785 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்ட வாராந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் (India) இருந்து 31,635 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ள நிலையில் இது 34.5 சதவீதம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும், மே மாதத்தில் இங்கிலாந்திலிருந்து (England) 6,195 பேரும், சீனாவிலிருந்து (China) 6,043 பேரும், ஜேர்மனியிலிருந்து (Germany) 5,526 பேரும், பங்களாதேஸ் நாட்டிலிருந்து 4,693 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, மே மாதத்திற்கான சமீபத்திய புள்ளிவிபரங்களின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 988,669 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், 188,694 பேர் இந்தியாவிலிருந்தும், 109,840 பேர் ரஷ்யாவிலிருந்தும், 93,248 பேர் இங்கிலாந்திலிருந்தும் வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version