சிறைத்தண்டனையை எதிர்த்து மஹிந்தானந்த உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் !


உயர் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.

அதற்கமைய, குறித்த வழக்கு விசாரணையில் அவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version