அகமதாபாத் விமான விபத்து – கருப்புப் பெட்டி மீட்பு !

அகமதாபாத் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

கருப்புப் பெட்டியில் பதிவான தகவல்களை ஆய்வு செய்ய 10 முதல் 15 நாட்களாகும் என தெரிவிக்கப்படுகிறது.

கருப்பு பெட்டியில் பதிவான தகவல்கள் அடிப்படையில் விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும். விமான விபத்துக்கான காரணத்தை அறிவதில் கருப்புப் பெட்டி முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த கருப்புப் பெட்டி, விமானத்தின் வாள் பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும். அதில் விமானிகள் மற்றும் ஊழியர்களின் உரையாடல்கள், விமானத்தின் வேகம், பறந்த உயரம், அப்போதைய காலநிலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவாகிவிடும்.

அதை வைத்தே பெரும்பாலான விமான விபத்துகள் எவ்வாறு நிகழ்ந்தது என்பது தெரியவரும்.

தீப்பற்றினாலும் பாதிக்காத வகையில் டைட்டானியம் மற்றும் உலோகங்களால் கருப்புப் பெட்டி வடிவமைக்கப்படும்.

கடுமையான அழுத்தம் மற்றும் மோதலை தாங்கக்கூடியவை. இந்த நிலையில் அகமதாபாத் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்து மீட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே விமான விபத்தில் 241 உயிரிழந்துள்ளனர். 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 37 பேரின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Exit mobile version