தாக்குதல் அச்சுறுத்தல் – KKS பொலிஸ் நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பு

வடக்கில் உள்ள 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு (KKS) தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது.

குறித்த தொலைபேசி அழைப்பு கடந்த 11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணியளவில் வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இருப்பினும், வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பு குறித்து மேலதிக அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Exit mobile version