கந்தகெட்டிய பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தெரிவான நவரத்ன முதியன்சேலாகே விஜேபாலவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தகெட்டிய பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நிர்வாகக் குழு மற்றும் கட்சி செயற்குழுவின் முடிவுக்கு இணங்க செயல்படத் தவறியதன் காரணமாக அவரது கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.