கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரு மகள்கள் மற்றும் மருமகன் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் இன்று (19) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல, அமலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அமலி ரம்புக்வெல்லவின் கணவர் இசுரு புலஸ்தி பண்டார பொல்கஸ்தெனிய ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் 134,097,731.39 ரூபா பெறுமதியான சொத்துக்கள், 40,000,000 ரூபா பெறுமதியான அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் 20,500,000 பெறுமதியான பென்ஸ் ரக கார் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளுடன் தொடர்புடைய சுமார் 40 நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு முதலீட்டுத் திட்டங்கள் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Exit mobile version