லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் கன்னட நடிகர் உபேந்திரா, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, மலையாள நடிகர் செளபின் சாஹிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதுதவிர தமிழ் சினிமா பிரபலங்களான சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோரும் கூலி படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தேவா என்கிற கேரக்டரில் நடித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜும், ரஜினிகாந்தும் முதன்முறையாக இணைந்துள்ள படம் இது என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.
கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் ஒரு குத்துப் பாடலை பாடி இருக்கிறார். சிக்கிட்டு என தொடங்கும் அப்பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்பகனவே வெளியாகி இணையத்தில் படு வைரலானது.
இந்த நிலையில், அந்த பாடலின் முழு வெர்ஷனையும் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியிட உள்ளனர். இதனை கடந்த வாரமே ரிலீஸ் செய்ய இருந்தனர். ஆனால் சில காரணங்களுக்காக அந்த பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் இந்த வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.
கூலி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சிக்கிட்டு வைப் பாடல் வரிகளை அறிவு எழுதி உள்ளார். இப்பாடல் வருகிற ஜூன் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக ஒரு குட்டி புரோமோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.