ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் இடையே முக்கிய சந்திப்பு இன்று (24) வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது மனித உரிமைகள் தொடர்பான பரஸ்பர முக்கியமான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இவற்றை முன்னெடுப்பதற்கு தொடர்ச்சியான பயனுள்ள இடைத்தரகராக செயற்படுவதற்கு அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் சமாதான முயற்சிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர், வோக்கர் டர்க்கிற்கு விளக்கமளித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக தனது X கணக்கில் ஒரு பதிவு வெளியிட்ட அமைச்சர் விஜித ஹேரத், “மனித உரிமைகள் மற்றும் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் உறுதியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.