தலைமறைவாக இருந்த நடிகர் சிக்கினார்

நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த சில வருடங்களாக போதை பொருள் வாங்கி பயன்படுத்தி வந்தது, போதை பார்ட்டி நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார்.

இந்த வழக்கில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவும் சம்மந்தப்பட்டு இருப்பதால் அவரை விசாரணை ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பினார்கள். ஆனால் அவர் திடீரென போன் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக பொலிஸார் தெரிவித்து இருந்தனர்.

கிருஷ்ணாவை பொலிஸார் தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் தற்போது அவர் சிக்கி இருக்கிறார்.

அவரிடம் பொலிஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படலாம் என தெரிகிறது.

Exit mobile version