பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெதும் நிஸ்ஸங்க சதம் விளாசினார்.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இடம்பெற்று வருகிறது.
அதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, தமது முதலாவது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 247 ஓட்டங்களை பெற்றுள்ளது.
பங்களாதேஷ் அணி சார்பாக ஷட்மன் இஸ்லாம் 46 ஓட்டங்களையும், முஷ்பிகுர் ரஹீம் 35 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்ணான்டோ மற்றும் தினுஷ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்ணான்டோ 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை 1 விக்கெட்டு இழப்பிற்கு 210 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக பெதும் நிஸ்ஸங்க 108 ஓட்டங்களையும், தினேஸ் சந்திமல் 59 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளனர்.