இருவரின் உயிரை காப்பாற்றிய பொலிஸார்
உஸ்ஸன்கொட கடற்கரையில் நீராட சென்ற இருவர், அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நேற்று (28) மாலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிர்காக்கும் பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருவரையும் மீட்டு, அவர்களுக்கு அடிப்படை முதலுதவி அளித்த பின்னர், அவர்களின் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் சிக்கிய இருவரும் ஹூங்கம பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 34 வயதானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இருவரையும் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் 55986 அநுர, பொலிஸ் கான்ஸ்டபிள் 99168 துலாஜ் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 104435 சரத்சந்திர ஆகியோர் மீட்டனர்.